''இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்'' - பாக். ராணுவ தளபதி அசிம் முனீர் பேச்சு
இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையையும் ஆதரித்துள்ளார்.

இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அசிம், பாகிஸ்தான் எவ்வாறு உருவானது என்பதை உங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று பாகிஸ்தானியர்களை வலிறுத்தினார். கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கூறுகையில், "வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, நமது சிந்தனைகள், நோக்கங்கள் வேறு. இங்கிருந்துதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளம் அமைக்கப்பட்டது. நாம் இரண்டு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல.
What's Your Reaction?