நானும் ஒரு முதலாளி | வாழ்ந்து காட்டுவோம்!

கலைவாணி, 34 வயதான இரு குழந்தைகளின் தாய், தனது திறமையை மேம்படுத்தி, தனது குடும்ப நிலையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்பினார். ஆனால், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள கல்குணம் கிராமத்தில் வேலைவாய்ப்புகள் குறைவு, கலைவாணி தனது கனவுகளை நனவாக்கும் வழிக்காகக் காத்திருந்தார்.

Dec 15, 2024 - 11:35
 0  4
நானும் ஒரு முதலாளி | வாழ்ந்து காட்டுவோம்!

கைகூடிய கனவு: கலைவாணி, 34 வயதான இரு குழந்தைகளின் தாய், தனது திறமையை மேம்படுத்தி, தனது குடும்ப நிலையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்பினார். ஆனால், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள கல்குணம் கிராமத்தில் வேலைவாய்ப்புகள் குறைவு, கலைவாணி தனது கனவுகளை நனவாக்கும் வழிக்காகக் காத்திருந்தார்.

அப்போதுதான் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் அவருக்கு அறிமுகமானது. அந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் ‘சமுதாயத் திறன் பள்ளியில் (CSS) ஆரி எம்பிராய்டரி, தையல் பயிற்சிகளைப் பெற்றவர், தனது சுய தொழில் பயணத்தைத் தொடங்கினார். ரவிக்கை, சல்வார் தைத்தல், ஆரி எம்பிராய்டரி செய்து கொடுத்தல் எனக் கடுமையாக உழைத்து, மாதம் ரூ.20,000 வருமானம் பெறத் தொடங்கினார். இது அவரது குடும்ப நிதி நிலையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow