விஜயின் காலைச் சுற்றிய பாம்பு! | ப்ரியமுடன் விஜய் - 15
திரையிலும் தொலைக்காட்சியிலும் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பல தளங்களில் புகழ்பெற்றவர் சி.ரங்கநாதன். விஜயை வைத்து அவர் இயக்கிய ‘கோயமுத்தூர் மாப்ளே’ படமாக்கப்பட்ட நாள்களின் நினைவுகளை

திரையிலும் தொலைக்காட்சியிலும் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பல தளங்களில் புகழ்பெற்றவர் சி.ரங்கநாதன். விஜயை வைத்து அவர் இயக்கிய ‘கோயமுத்தூர் மாப்ளே’ படமாக்கப்பட்ட நாள்களின் நினைவுகளை இந்த வாரம் பகிர்ந்துகொள்கிறார்:
“சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராகப் புகழ்பெறுவது எளிது. ஆனால், உழைக்கும் மக்களும் நடுத்தர வர்க்கமும் ஏற்றுக்கொள்ளும் ஒரு ‘சக்சஸ்ஃபுல் ஹீரோ’ வாக ஆவது மிகக் கடினமானது. எப்படிப்பட்ட கதைகளில் நடிக்க வைத்தால், விஜயை மக்கள் கொண்டாடும் ஒரு ஹீரோவாக ஆக்க
முடியும் என்கிற சூத்திரம் அறிந்து அவரை உருவாக்கியவர் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் போட்டுக்கொடுத்த அஸ்திவாரம்தான் விஜயின் வெற்றிப் பயணத்துக்குப் பாதை போட்டுக் கொடுத்தது. ‘நாளைய தீர்ப்பு’ படத்துக்குப் பிறகு பிரபல மான பத்து இயக்குநர்களை நேரில் போய் பார்த்தார் எஸ்.ஏ.சி. ‘என் மகனுக்குச் சம்பளம் வேண்டாம். காஸ்டியூம் நாங்களே ஏற்பாடு செய்துகொள்கிறோம். என் மகனுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று கேட்டார். ஆனால், அப்போது மறுத்த அந்தப் பத்து இயக்குநர்களும் பின்னாளில் விஜயின் கால்ஷீட் கேட்டு வந்தார்கள். மகனை அப்படி ‘சக்சஸ்ஃபுல் ஹீரோ’வாக உருவாக்கிக் காட்டினார் எஸ்.ஏ.சி. அப்பாவின் இயக்கத்தில் விஜய் தொடர்ந்து நடித்த தொடக்கக் காலப் படங்கள் அனைத்திலும் நான் தான் இணை இயக்குநர் என்பதால் விஜயை உருவாக்க எஸ்.ஏ.சி. சார் எவ்வளவு சிரமங்களையும் ஏச்சுப் பேச்சுகளையும் சந்தித்தார் என்பது எனக்குத் தெரியும்.
What's Your Reaction?