இப்படித்தான் ஐ.ஏ.எஸ். ஆனோம்!

இந்த நூலை எழுதியுள்ள சஜ்ஜன் யாதவும் ஒரு குடிமைப் பணி அதிகாரி தான். இவர் 1994இல் ஐ.ஏ.எஸ். ஆனவர்; தற்போது மத்திய அரசின் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார்.

Jun 11, 2025 - 11:45
 0  3
இப்படித்தான் ஐ.ஏ.எஸ். ஆனோம்!

தோல்புர் ஹவுஸ், ஷாஜஹான் சாலை, புதுடெல்லி. இன்று லட்சக் கணக்கான இந்திய இளைஞர்களின் மனத்தில் பசுமரத் தாணி போலப் பதிந்துள்ள முகவரி இது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை நடத்தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இங்குதான் இயங்கிவருகிறது.

முதல்நிலைத் தேர்விலும் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்றவர்களைத் தேர்வுசெய்யும் இறுதிக்கட்ட நேர்காணல் இங்குள்ள ‘யுபிஎஸ்சி பவ’னில் நடைபெறும். அதையும் சிறப்பாக எதிர்கொண்டு இந்த அலுவலகத்திலிருந்து மன நிறைவுடன் திரும்ப வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது, ‘இலக்கு: ஐஏஎஸ்’ நூல். குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஏழு பேரின் அனுபவங்களை ஒரு கதைபோல விவரிக்கிறது இந்த நூல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow