பொறியியல் பாடப்பிரிவின் இன்னொரு பரிமாணம் | புதியன விரும்பு 2.0 - 8

ஒரு காலத்தில் இன்ஜினியரிங் என்றால் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட் ரிக்கல் என்று இருந்த நிலைமை மாறி, காலத்தின் தேவைக்கு ஏற்ப ஏராளமான பொறியியல் படிப்புகள் உருவாகிவிட்டன.

Jun 11, 2025 - 11:45
 0  4
பொறியியல் பாடப்பிரிவின் இன்னொரு பரிமாணம் | புதியன விரும்பு 2.0 - 8

ஒரு காலத்தில் இன்ஜினியரிங் என்றால் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்று இருந்த நிலைமை மாறி, காலத்தின் தேவைக்கு ஏற்ப ஏராளமான பொறியியல் படிப்புகள் உருவாகிவிட்டன. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் சூழ்நிலையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு முக்கியத் துறைகளின் இணைவுதான் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். அத்துடன் ரோபாட் டிக்ஸ், டெலி கம்யூனிகேஷன்ஸ்,சிஸ்டம்ஸ் கண்ட்ரோல், ஆட்டோமேஷன், புராடக்ட் இன்ஜினியரிங் போன்றவையும் இதனுடன் தொடர்புடைய துறைகளாக உள்ளன.

‘மெக்கட்ரானிக்ஸ்’ என்கிற வார்த்தை 1969ஆம் ஆண்டு வாக்கில்தான் பயன்பாட் டுக்கு வந்தது. யாஸ்கவா எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்த டெட்சரோ மோரி என்பவர்தான் இந்த வார்த்தையை உருவாக்கினார். ஐப்பானில் டிரேட் மார்க்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தை, பின்னர் பொது வெளியில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow