அந்த 12 படங்கள் | 22வது சென்னை சர்வதேசப் படவிழா
சென்னை சர்வதேசப் பட விழாவின் 22வது பதிப்பில் புதிதாக கவனம் ஈர்த்துள்ளது உலகப்படப் போட்டிப் பிரிவு. அதற்கு, ஒளிப்பதிவாளர், இயக்குநர் சந்தோஷ் சிவன் தலைமையை உள்ளடக்கிய நீதிபதிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சர்வதேசப் பட விழாவின் 22வது பதிப்பில் புதிதாக கவனம் ஈர்த்துள்ளது உலகப்படப் போட்டிப் பிரிவு. அதற்கு, ஒளிப்பதிவாளர், இயக்குநர் சந்தோஷ் சிவன் தலைமையை உள்ளடக்கிய நீதிபதிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகப் படப் போட்டிப் பிரிவுக்குத் தேர்வாகியுள்ள 12 படங்களில் 5 இந்திய மொழிப் படங்கள்.
அவற்றில், ஹரிகுமரன் இயக்கியுள்ள ‘கிணறு’ என்கிற தமிழ்ப் படம் இடம்பெற்றுள்ளது. சிறார் திரைப்படமான இது, இப்படவிழாவில் பிரீமியராகத் திரையிடப்படுகிறது. ‘ஹாய் நானா’, ‘கமிட்டி குர்ரோள்ளு’ ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களும் ‘ஓட்டா’ என்கிற மலையாளப் படமும், ‘தீவார் கி அஸ் பார்’ என்கிற இந்திப் படமும் மற்ற 4 இந்தியப் படங்கள்.
What's Your Reaction?