திருச்சிற்றம்பலம் உடையான் கல்வெட்டு காட்டும் தீப வழிபாடு | கார்த்திகை தீபம் சிறப்பு

திருச்சிற்றம்பலம் உடையான் கல்வெட்டு காட்டும் தீப வழிபாடு என திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார்.

Dec 13, 2024 - 14:05
 0  5
திருச்சிற்றம்பலம் உடையான் கல்வெட்டு காட்டும் தீப வழிபாடு | கார்த்திகை தீபம் சிறப்பு

திருச்சிற்றம்பலம் உடையான் கல்வெட்டு காட்டும் தீப வழிபாடு என திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “கார்த்திகை மாதத்தில் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையின் உச்சியில் பழமையான தமிழ் எழுத்துகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டை அடையபுலம் பாண்டியனுடன் சென்று கண்டெடுத்தோம். தொல்பொருள் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் உதவியுடன், இக்கல்வெட்டை ஆய்வு செய்தபோது, ஆயிரம் ஆண்டுகளை கடந்து மகா தீபம் ஏற்றப்படுவது தெரியவந்தது.

அண்ணாமலை என்றால் உச்சியைக் காண இயலாமல் நெடிது நிற்கும்மலை என்றே பொருள். பிரம்மனுக்கும், திருமாலுக்கும், சிவபெருமான் தனது உருவத்தை ஜோதியாய் நின்று காட்டிய தலம் இது. பகவான் கிருஷ்ணரின் அறிவுரையின்படி அர்ஜுனன் வந்து வணங்கிய தலம் திருவண்ணாமலை ஆகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow