பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19
பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன.

பறவைகள் பல காரணங்களுக்காகத் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நெடுந்தூரத்துக்குப் பயணத்தை மேற்கொள்கின்றன. இந்தப் பயணத்தை ‘வலசை’ என்கிறோம். பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன. மற்ற பறவைகள் 5,000 - 10,000 கி.மீ. வரை வலசை செல்கின்றன. ஆலா போன்ற சில பறவைகள் 70,000 கி.மீ. வரை வலசையை மேற்கொள்கின்றன.
உலகில் உள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான பறவை இனங்களில் 15 – 20 சதவீதப் பறவைகள் வலசை செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இரண்டு இடங்கள், வெவ்வேறு வெப்பநிலையில் இருக்கின்றன. இவற்றைப் பறவைகள் கணக்கில் கொண்டு வலசை செல்கின்றன.
What's Your Reaction?