ஐசக் நியூட்டன் | விஞ்ஞானிகள் - 10

சூரியனிலிருந்து வரும் ஒளி வெள்ளை என அனைவரும் நினைக்க, நியூட்டன் அதை முப்பட்டகத்தில் செலுத்தினார். சிதறிய ஒளி ஏழு வண்ணங்களாகப் பிரிந்தது. வெள்ளை ஒளி ஏழு நிறங்களையும் கொண்டது. இந்த நிறங்களை மறுபடியும் ஒன்று சேர்ந்தால் மீண்டும் வெள்ளை ஒளியாக மாறும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். ஒளியின் வேகம் குறித்தும் ஆய்வுகள் செய்தார். 

Nov 25, 2024 - 15:35
 0  4
ஐசக் நியூட்டன் | விஞ்ஞானிகள் - 10

சர் ஐசக் நியூட்டன் 1643, ஜனவரி 4 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். அறிவியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். பிறந்த மூன்று மாதங்களுக்குள் தந்தையை இழந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாயையும் பிரிந்தார். பாட்டியிடம் வளர்ந்தார். கிராமப்புற பள்ளியில் படித்தார். 14 வயதில் படிப்பு நிறுத்தப்பட்டது. நியூட்டனுக்கு படிப்பில் ஆர்வம் இருப்பதை அறிந்த அவரின் மாமா, 1661இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரியில் சேர்த்தார். கணிதத்தையும் அறிவியலையும் சிறப்பாகப் படித்தார்.

அந்தக் காலக் கல்லூரிகள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றும். நியூட்டன் கூடுதலாக கலிலியோ, கோப்பர்நிக்கஸ், கெப்ளர் போன்ற நவீன அறிஞர்களின் கருத்துகளையும் படிக்க விரும்பினார். அப்போது பிளேக் என்கிற பெருந்தொற்று நோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. வீட்டிலிருந்தபடியே ஆய்வு செய்தவருக்கு கிடைத்ததுதான் ஈர்ப்பு விசைக் கோட்பாடு. பட்டம் பெற்ற பிறகே அவருக்குள் இருந்த அறிவியல் அறிஞர் வெளிப்பட்டார். தான் படித்த டிரினிடி கல்லூரியிலேயே பேராசிரியராகச் சேர்ந்தார். கணிதம், இயற்பியல் துறைகளில் முக்கியப் பங்களிப்பைச் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow