பார்க்கின்சன் நோய்: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி. அல்லது நடுக்குவாதம் என்பது நரம்பு மண்டலத்தைச் சிதைக்கும் ஒரு நோய்.

பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி. அல்லது நடுக்குவாதம் என்பது நரம்பு மண்டலத்தைச் சிதைக்கும் ஒரு நோய். மூளையில் ‘டோபோமைன்’ என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இந்நோய் முதியவர்களிடம் காணப்பட்டாலும் 40 - 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என இருபாலருக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
1817இல் ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் இந்நோயைக் கண்டறிந்தார். எனவே அவருடைய பெயரிலேயே பார்க்கின்சன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பார்க்கின்சனால்பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளிலிருந்தே அறிகுறிகளை அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு பொருளையும் கையால் சரியாகப் பிடிக்க முடியாமல் தடுமாறுவார்கள், டம்பளரில் ஒரு கப் தண்ணீரையோ, தேனீரையோ கையில் பிடிக்க முடியாமல் கை நடுங்கும். இவற்றைக் குடிப்பதிலும் மிகவும் சிரமப்படுவார்கள். தினசரி அத்தியாவசிய வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தவிப்பார்கள். குறிப்பாகப் பற்றி நடப்பதில் சிரமம் இருக்கும். உடல் வளைந்தது போல காணப்படுவார்கள்.
What's Your Reaction?