கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 6
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.

மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
What's Your Reaction?