‘ரேண்டம்’ எண் என்றால் என்ன?
பொறியியல் படிப்பில் ஒரே மாதிரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இருக்கும் சூழ்நிலையில் யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண் (Random Number).

பொறியியல் படிப்பில் ஒரே மாதிரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இருக்கும் சூழ்நிலையில் யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண் (Random Number). ஒரே விதமான கட்-ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதுபோன்ற சூழ்நிலையில் இரண்டு பேருக்கும் ரேங்கை நிர்ணயிப்பது எப்படி? அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது பார்க்கப்படும்.
What's Your Reaction?