ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா; ஜூன் 3-ல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தொடக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஜூன் 3-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

May 21, 2025 - 15:40
 0  2
ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா; ஜூன் 3-ல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தொடக்கம்

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஜுன் 3ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி ஜுன் 3ம் தேதி காலபூஜை முடிந்து மாலை ராவண சம்ஹாரமும், ஜுன் 4-ம் தேதி பகல் 12 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ விழாவும், ஜுன் 5-ம் தேதி காலை 8 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow