நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

நெல்​லை​யில் நேற்று நெல்​லை​யப்​பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்​திரு​விழா தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

Jul 9, 2025 - 01:55
 0  4
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

திருநெல்வேலி: நெல்​லை​யில் நேற்று நெல்​லை​யப்​பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்​திரு​விழா தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

நெல்​லை​யப்​பர் கோயி​லில் கடந்த 30-ம் தேதி ஆனிப் பெருந்​திரு​விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா நாட்​களில் காலை, மாலை நேரங்​களில் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி, அம்​பாள் வீதி​யுலா நடை​பெற்​றது. விழா​வின் 8-ம் நாளான நேற்​று​முன்​ தினம் காலை நடராஜப் பெரு​மாள் திரு​வீதி உலா, மாலை​யில் சுவாமி கங்​காள​நாதர் தங்க சப்​பரத்​தில் வீதி​யுலா, இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாக​னத்​தி​லும், அம்​பாள் தங்​கக்​கிளி வாக​னத்​தி​லும் திரு​வீ​தி​உலா நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow