பறவைகள் எப்படித் தண்ணீர் குடிக்கும்? | பறப்பதுவே 21

மனிதர்களைப் போலவே பறவைகளின் உடலிலும் 60-75 சதவீதம் நீர் உள்ளது. வளர்ந்த பறவைகளைவிடச் சிறிய பறவை களின் உடலில் இருக்கும் நீரின் அளவு சற்று அதிகம். பறவைகளுக்கும் தாகம் ஏற்படும்.

Jun 18, 2025 - 13:30
 0  4
பறவைகள் எப்படித் தண்ணீர் குடிக்கும்? | பறப்பதுவே 21

மனிதர்களைப் போலவே பறவைகளின் உடலிலும் 60-75 சதவீதம் நீர் உள்ளது. வளர்ந்த பறவைகளைவிடச் சிறிய பறவைகளின் உடலில் இருக்கும் நீரின் அளவு சற்று அதிகம். பறவைகளுக்கும் தாகம் ஏற்படும். கோடைக் காலத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போதும், பறக்கும்போதும் பறவைகளின் உடல் வறட்சி அடையும். உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைவதால் தாகம் ஏற்படுகிறது. நீரைக் குடிப்பதன் மூலம் பறவைகள் தங்களுடைய நீர்ச்சத்து சமநிலையைப் பேணுகின்றன.

பறவைகளுக்குப் போதிய அளவு நீர் கிடைக்காதபோது நீரிழப்பு நிலைக்கு உள்ளாகி, அவற்றின் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். மேலும் பறவைகளின் இடப்பெயர்வு, இனப்பெருக்கம் நடைபெறும் காலத்தில் அதிக அளவில் ஆற்றலைச் செலவிடுவதால் நீர் முக்கியமானது. பெண் பறவைகள் முட்டையிடும்போது, முட்டையின் உள்ளே இருக்கும் திரவப் பகுதி கருவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால்தான் ஆரோக்கியமான முட்டைகளை இட முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow