இந்தியர்களின் பெருமைக்குரிய ‘இருவர்’ | சாதனையாளர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியரான ஷுபன்ஷு சுக்லாவைக் கோடிக்கணக்கான மக்கள் வாழ்த்தினர். அந்த வாழ்த்துகளில் ஒன்று மிகவும் சிறப்பானது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியரான ஷுபன்ஷு சுக்லாவைக் கோடிக்கணக்கான மக்கள் வாழ்த்தினர். அந்த வாழ்த்துகளில் ஒன்று மிகவும் சிறப்பானது. அது, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் வாழ்த்துதான்! 1949ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவில் பிறந்தார் ராகேஷ் சர்மா.
பள்ளிக் கல்வியை ஹைதராபாத்தில் முடித்தார். 1966ஆம் ஆண்டு தேசிய ராணுவப் பள்ளியில், விமானப்படைப் பிரிவில் சேர்ந்து படிப்பை முடித்தார். 1970ஆம் ஆண்டு, 21 வயதில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானியாக நியமிக்கப்பட்டார்! 1982ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் (ரஷ்யா) விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் திட்டத்தில் சேர்ந்தார்.
What's Your Reaction?