ஸ்விஸ் எனும் சொர்க்கம் 16: பெர்ன் நகரின் அடையாளம் கரடி!
பெர்ன் நகரில் 6000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள கரடிக்குழி பூங்கா (bear pit) உலகப் புகழ்பெற்றது. நகரின் மையப்பகுதியில் உள்ளது. ‘பெர்ன்’ என்கிற பெயரும்கூட கரடியைக் குறிப்பதுதான்.

பிறந்தது ஜெர்மனியில் என்றாலும் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்ன் நகரில்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1902 முதல் 1909 வரை வசித்தார். இங்கிருந்துதான் உலகப் புகழ்பெற்ற ‘தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி’ உருவாக்கி, வெளியிட்டார். அவர் வசித்த வீட்டைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
நெருக்கமான வீடு அது. நகரின் மையப் பகுதியில் கடைத்தெருவில் அமைந்திருந்தது. இரண்டு மாடிக் கட்டிடம், தலையைச் சுற்ற வைக்கும் உயரமான மாடிப்படிகள். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வசித்திருக்கிறார் ஐன்ஸ்டைன். வாடகைக்குத்தான் வசித்திருந்ததால் அவர் வாழ்ந்தது ஆடம்பரமான வாழ்வு அல்ல என்பது புரிந்தது. அவர் பெற்றவை சுமார் ஐம்பது காப்புரிமைகள்!
What's Your Reaction?