டிஜிட்டல் டைரி 18: நீங்கள் எந்த வகை ‘விக்கிபீடியா’ பயனர்?

மூன்று வகையைச் சேர்ந்தவரும் அவரவருக்கான தனித்தன்மை கொண்டிருப்பதோடு, ஒவ்வொருவரின் ஆர்வமும், அதற்கானத் தேடலும் மாறுபடுகிறது.

Nov 11, 2024 - 15:48
 0  17
டிஜிட்டல் டைரி 18: நீங்கள் எந்த வகை ‘விக்கிபீடியா’ பயனர்?

கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவை உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பயனரின் பங்களிப்பால் இயங்கும் விக்கிபீடியாவை இணையவாசிகள் அணுகும் விதத்தையும் அதன் தாக்கத்தையும் அறிந்து கொள்வதற்காகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, விக்கிபீடியா பயனர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில், விக்கிபீடியாவின் கட்டுரைகளைப் பயனர்கள் வாசிக்கும் விதம் தொடர்பாக ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில், விக்கி பயனர்கள் இரண்டு வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. ‘வேட்டைக்காரர்கள்’, ‘முந்திரிக்கொட்டை தன்மை கொண்டவர்கள்’ என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டனர். ‘வேட்டைக்காரர்கள்’ எனில், ஒரு இலக்குடன் விக்கி பக்கங்களை அணுகித் தகவல்களைத் தேடுபவர்கள். மாறாக ‘Busybodies’ எனச் சொல்லப்படும் இரண்டாவது பிரிவினர். ஒரு கருப்பொருளில் இருந்து இன்னொரு கருப்பொருளுக்குத் தாவியபடி விக்கி கட்டுரைகளை அணுகுபவர்கள் என விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளைச் செய்ய இரண்டாவது முறையாக இக்குழு பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது, 50 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பயனர்கள் இதில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow