பெண்களின் குரலாக ஒலித்த தொடர்
பிருந்தா சீனிவாசன் எழுதிய ‘பெண் எனும் போர்வாள்’ தொடரின் நிறைவுக் கட்டுரை, மனதில் நின்றது

பிருந்தா சீனிவாசன் எழுதிய ‘பெண் எனும் போர்வாள்’ தொடரின் நிறைவுக் கட்டுரை, மனதில் நின்றது. உரிமைகள் இருப்பதால் மட்டுமே பயனில்லை. பயன்படுத்தப்படவேண்டும் என்பது உண்மைதான். மாறாக நமது நாட்டில் இத்தனை சட்டதிட்டங்கள் இருந்தும், பாலியல் பொருளாகப் பெண் பார்க்கப்படுவதில் இருந்து விடுபடவில்லை. பெண்களை நுகர்பொருளாக்கும் விளம்பரங்கள் வியாக்கியானங்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். பெண்ணுரிமை பேசப்படாத நிலையே பெண் விடுதலை என்ற வாதம் ஏற்புக்குறியதே.
- சு.வாசன், திருநெல்வேலி.
What's Your Reaction?