உன் உலகம், என் உலகம், நம் உலகம்! | தேன் மிட்டாய் 31
என் முதுகுக்குப் பின்னால் மட்டுமல்ல முகத்துக்கு நேராகவும் இவர்கள் என்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போது, ‘ஐயோ பாவ’மாகவே அவர்கள் எனக்குக் காட்சி அளிக்கிறார்கள்.

நியாயப்படி பார்த்தால் கோபமும் எரிச்சலும் தான் வர வேண்டும். எனக்கென்னவோ இந்த ஆண்களைக் கண்டால் பரிதாபம்தான் தோன்றுகிறது. என் முதுகுக்குப் பின்னால் மட்டுமல்ல முகத்துக்கு நேராகவும் இவர்கள் என்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போது, ‘ஐயோ பாவ’மாகவே அவர்கள் எனக்குக் காட்சி அளிக்கிறார்கள்.
‘என்னது, மேரி கியூரி ரேடியத்தைக் கண்டறிந்திருக்கிறாரா? பொலோனியமும் அவருடைய கண்டறிதலா? கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தவர் அவரா? வாய்ப்பே இல்லை. அவரால் இதைச் செய்திருக்க முடியாது. அவர் கணவர் பியரி கியூரியைத் தெரியும் அல்லவா? பெரிய ஆய்வாளர். புத்திசாலி. நிச்சயம் அவர்தான் இந்தச் சாதனைகளை நிகழ்த்தி இருக்க வேண்டும்.’
What's Your Reaction?