முடிவே இல்லாத காதல்

திருமணம், சேர்ந்து வாழ்தல் எதுவாயினும் இரு மனிதர்கள் வாழ்க்கையை மிச்சம் மீதி, ஒளிவு மறைவு ஏதும் இன்றிப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியங்களை அது அளிக்கிறது. இணையோடு வாழ்வதைத் தவிர்ப்பது ஓர் அசாதாரணமான முடிவுதான்.

Feb 14, 2025 - 13:45
 0  3
முடிவே இல்லாத காதல்

திருமணம், சேர்ந்து வாழ்தல் எதுவாயினும் இரு மனிதர்கள் வாழ்க்கையை மிச்சம் மீதி, ஒளிவு மறைவு ஏதும் இன்றிப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியங்களை அது அளிக்கிறது. இணையோடு வாழ்வதைத் தவிர்ப்பது ஓர் அசாதாரணமான முடிவுதான். எனினும் அந்த முடிவை எடுத்துத் தனித்தே வாழ்பவர்களும் சேர்ந்ததுதான் நம் சமூகமாக உள்ளது.

இன்னொருவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளாதவர்கள் மனிதப் பிறவியாகப் பிறந்ததன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை என்கிற பரிவு நமக்குத் தோன்றலாம். அனைவரும் சேர்ந்து இவர்களைப் புறக்கணித்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சிகூட ஏற்படலாம். உரிமை இருக்குமிடத்தில் அவர்களோடு தயக்கம் ஏதும் இன்றி நம்மால் உரையாட முடியும். தனியாக வாழ்வது என்கிற முடிவை எடுக்க நேர்ந்தது குறித்த நம் கேள்வி அவர்களை ஒருவேளை வருந்த வைக்கலாம். அல்லது அவர்கள் அளிக்கும் பதில் நம்மை வருந்தச் செய்யலாம். இரண்டுக்குமான சாத்தியங்களை ஏற்றுக்கொள்ள முடிகிற உறவு இருக்கையில் அங்கே மனம் விட்டுப் பேச முடிகிறது. அப்படியோர் உரையாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வாய்த்தது. கேள்வி கேட்டவர் ஜெயகாந்தன்; பதில் சொன்னவர் தோழர் ஏ.எஸ்.கே.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow