பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன.

May 14, 2025 - 13:25
 0  4
பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன. புறா, காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் மரக்கிளைகள், கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்கின்றன. இவற்றின் கால்களில் உள்ள சிறப்புத் தசை நார்கள், அவை கீழே விழாமல் தடுக்கின்றன.

சில பறவைகள் தங்கள் கூடுகளில் தூங்குகின்றன, குறிப்பாகக் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பெற்றோர் பறவைகள். தூக்கணாங்குருவி, ஸ்விஃப்ட் (உழவாரன்) போன்ற பறவைகள் இப்படி உறங்குகின்றன. கடல் பறவைகளும் வாத்து போன்ற நீர்ப் பறவைகளும் தண்ணீரில் மிதந்துகொண்டே தூங்கும் முறையைக் கையாளுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow