என்னை மயக்கிய 8 உலகப் படங்கள்!

இந்த வரிசையில் பல முக்கிய நபர்களும் நின்றே இடம் பிடித்தனர். யாரும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளே நுழையாத அளவுக்கு கொல்கத்தாவாசிகளிடம் தன்னொழுங்கு இருந்தது.

Dec 11, 2024 - 22:25
 0  3
என்னை மயக்கிய 8 உலகப் படங்கள்!

மூன்று தசாப்தங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவின் 30வது பதிப்பு, கடந்த 4ஆம் தேதி தொடங்கி நிறைவு பெற்றது. பிரெஞ்சுத் திரைப்படங்களை மையமாகக் கொண்டு அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கொல்கத்தாவை ஏன் இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை இப்படவிழா நடத்தப்பட்ட முறைமையை நேரில் கண்டதன் வழியாக உணர முடிந்தது. அப்படியொரு நேர்த்தியையும் ஒழுங்கையும் படவிழாவின் எல்லா நாள்களிலும் காண நேர்ந்தது.

பரந்து விரிந்த ‘கிரேட்டர்’ கொல்கத்தா மாநகரம் முழுவதும் பத்தொன்பது திரையரங்குகளில் நூறுக்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் உலகத் திரைப்படங்களையும் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த இந்தியத் திரைப்படங்களையும் காணும் வாய்ப்பைப் பெற்றனர். திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்னரே இயக்குநர் கௌதம் கோஷ் தலைமையிலான விழாக்குழு, பத்திரிகைகள், இணையதளம், சமூக ஊடகங்கள் வாயிலாகப் படவிழாவின் ஒவ்வொரு அம்சத்தின் சிறப்பையும் கொண்டு சேர்ந்தனர். தவிர, சாலை சந்திப்புகள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புகழ்பெற்ற கல்விச் சாலைகளில் திரைப்பட விழா விளம்பரத் தட்டிகளை வைத்திருந்தது, இந்த ஊடகங்களின் பக்கம் கவனம் திருப்ப முடியாத பிஸியான நகரவாசிகளுக்கும் படவிழாவைக் கொண்டு சேர்த்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow