கின்னஸில் இடம்பெற்ற பெடோங்கி! | வரலாறு முக்கியம் மக்களே! - 10
1962ஆம் ஆண்டில் இந்திய ராணுவப் பணிகளுக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் கோவேறு கழுதை அது. ஸ்பானிஷ் இனத்தைச் சேர்ந்தது. ராணுவத்தில் இருக்கும் கோவேறு கழுதைகளுக்கு அடையாள எண் (Hoof Number) வழங்குவார்கள்.

“நேற்று வரவேண்டிய கோவேறு கழுதைகள் இன்னும் வந்து சேரவில்லையே?” என்று எல்லையில் பாதுகாப்புக்கு நின்ற ஓர் இந்திய ராணுவ வீரர் கவலையுடன் கேட்டார். “ஒருவேளை எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றிருக்குமோ?” என்று இன்னொரு ராணுவ வீரர் சந்தேகத்தைக் கிளப்பினார். காலம் காலமாகப் பொதி சுமப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்ட ஜீவராசிகள் கழுதைகள். கழுதை பாதி, குதிரை பாதி கலந்து பிறந்த கலவையே கோவேறு கழுதைகள்.
அவை குதிரைகளைவிட அளவில் சிறியவை. கழுதைகளைவிடப் பெரியவை, வலிமையானவை. ஆனால், பொதி சுமப்பத்தில் அவற்றை விஞ்ச ஆள் கிடையாது. போருக்குச் செல்லும்போது ஆயுதங்களையும் உணவுப் பொருள்களையும் சுமந்து செல்வதற்காகக் கோவேறு கழுதைகள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல்வேறு தேசங்களின் ராணுவங்களிலும் கோவேறு கழுதைகள் இதற்காகவே பராமரிக்கப்படுகின்றன.
What's Your Reaction?