அபிலாஷம் - இன்னமும் இருக்கிறார்கள் ‘இதயம்’ முரளிகள்! | ஓடிடி உலகம்

இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த கடிதம் ஒன்றில் புதைந்திருக்கும்  வலியைச் சொல்லும் கதைதான் அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகிய தளங்களில் காணக் கிடைக்கும் ‘அபிலாஷம்’.  

Jul 25, 2025 - 13:45
 0  4
அபிலாஷம் - இன்னமும் இருக்கிறார்கள் ‘இதயம்’ முரளிகள்! | ஓடிடி உலகம்

காதல் கடிதங்கள் இரண்டு வகை. எழுதிய பின் சரியான பெறுநரிடம் சேர்பவை, இறுதிவரை பெறுநரிடம் சேராமல் எழுதியவரிடமே பொக்கிஷமாய் இருப்பது. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த கடிதம் ஒன்றில் புதைந்திருக்கும் வலியைச் சொல்லும் கதைதான் அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகிய தளங்களில் காணக் கிடைக்கும் ‘அபிலாஷம்’.

வாழ்க்கைச் சூழல் காரணமாக உள்ளம் கிளர்த்திய உணர்வை ஒருவருக்கு இன்னொரு வர் வெளிப்படுத்தத் தவறிய பதின்ம வயதினர் அபிலாஷும் ஷெரினும். அலையில் ஆடும் காகித வாழ்வு அவர்களைப் பிரித்து தூரமாகப் போட்டுவிட்டுப் போகிறது. இருபது ஆண்டுகள் கழித்து இன்னொரு சூழலில் காலம் அவர்களைச் சந்திக்க வைக்கிறது. நேற்றின் சுமைகள் நெருக்க, இரண்டாம் தருணச் சந்திப்பில் அவர்களின் வாழ்வு என்ன ஆனது என்பது கதை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow