தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் முதல் பல்வேறு விருது அறிவிப்புகள் வரை: சேதி தெரியுமா? @ ஏப்ரல் 15-17
நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஏப்.15: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஏப்.15: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
What's Your Reaction?