திரைப் பார்வை: அஞ்ஞாதவாசி (கன்னடம்) | குற்ற உணர்வின் பாரம்

இடம் என்கிற எவ்விதக் குழப்பமும் இல்லாமல் இரண்டு மணி நேரம் நம் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாதபடி செய்துவிடுகிறது இந்தக் கன்னட சினிமா

Apr 22, 2025 - 16:40
 0  6
திரைப் பார்வை: அஞ்ஞாதவாசி (கன்னடம்) | குற்ற உணர்வின் பாரம்

‘படத்தின் முடிவை யாருக்கும் சொல்ல வேண்டாம்; அது மட்டுமே எங்களின் மூலதனம்’. ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் புகழ் பெற்ற இந்த விளம்பர வாசகத்தோடு ‘அஞ்ஞாதவாசி’ படம் தொடங்குகிறது. மலையாளத்தில் வெளிவந்த ‘கிஷ்கிந்தா காண்டம்’ போல், கன்னடத்தில் திரைக்கதையை நம்பி வெளிவந்துள்ள படம். 1997இல் கர்நாடகத்தின் மலைக் கிராமம் ஒன்றில் ஒரே நாளில் இருவர் இறந்து கிடக்கின்றனர். புகார்கள், வழக்குகள் ஏதுமற்ற அமைதியான அவ்வூர் காவல் நிலையத்துக்கு இது சவாலான வழக்காக மாறுகிறது. மேலும் அந்த ஊருக்கு முதல் முதலாக வாங்கி வரப்பட்ட ஒரு மேசைக் கணினியால் குழப்பம் கூடுகிறது. புலனாய்வின் பாதையில் கிளம்பும் பழைய குற்றங்களின் பின்னணியோடு இந்த இரட்டைச் சாவின் மர்மம் என்ன என்கிற முடிவை நோக்கி நகர்வதுதான் கதை.

படத்தின் கதைசொல்லல் முறைதான் அதன் பலம். சில துண்டுக் காட்சிகளின் வழியாக மிக மெதுவாகத் தொடங்கும் திரைக்கதை, அக்கிராமத்தின் பிரத்தியேகக் குணங்கள், அங்கு வாழும் கதாபாத்திரங்கள், அவற்றின் அன்றாடம் என நிதானம் காட்டுகிறது. பிறகு வேகமெடுக்கும் திரைக்கதைக்குள் விரியும் அடுக்குகள், காலம், இடம் என்கிற எவ்விதக் குழப்பமும் இல்லாமல் இரண்டு மணி நேரம் நம் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாதபடி செய்துவிடுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow