காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் 

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது. காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும். 

May 16, 2025 - 12:40
 0  3
காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் 

உயிரினங்களின் மொழி-19

கம்பீரமான தோற்றம் கொண்ட குதிரைகள், பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. அவை பிரைமோன்கள் (வாசனை வேதிப்பொருள்கள்) மூலம் ஒன்றை மற்றொன்று தொடர்பு கொள்கின்றன. குதிரைகளின் கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் அதிக தொடு உணர்வுகள் உள்ளன. குதிரைகளைப் பராமரிப்பவர்கள் அவற்றின் கழுத்தைத் தொட்டுத் தடவுவதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் இதுவே.

அடுத்ததாக உடல்மொழி. குதிரை தலையை உயர்த்தும்போது, அது ஆர்வமாக இருக்கிறது அல்லது எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது என்று அர்த்தம். அதே தலையைத் தாழ்த்தும்போது அமைதியாக இருக்கிறது என்று பொருள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow