மகிழ்ச்சி என்பது போராட்டமே! | தேன் மிட்டாய் 50
நான் ஜென்னியாக இருந்தபோதே புரட்சி ஒரு சொல்லாக அறிமுகமாகிவிட்டது. என்றாலும் அதன் பொருளை முழுமையாக நான் உணர்ந்து கொண்டது ஜென்னி மார்க்ஸாக மாறிய பிறகுதான்.

நான் ஜென்னியாக இருந்தபோதே புரட்சி ஒரு சொல்லாக அறிமுகமாகிவிட்டது. என்றாலும் அதன் பொருளை முழுமையாக நான் உணர்ந்து கொண்டது ஜென்னி மார்க்ஸாக மாறிய பிறகுதான். அவர் யார், அவரோடு இணைந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவது எப்படி இருக்கும், அந்தப் புதிய வாழ்க்கையில் என்னவெல்லாம் கிடைக்கும், என்னவெல்லாம் கிடைக்காது என்று அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டேன். பற்றிக் கொண்ட பிறகு, ஒரு கணம், ஒரேயொரு கணம்கூட இப்படியொரு முடிவை எடுத்துவிட்டோமே என்று கலங்கியதில்லை நான்.
‘ஜென்னி, ஜென்னி வா இங்கே. பார் இதை’ என்று காட்டுக் கத்தல் கத்தியபடி ஓடிவருவார். என்னவோ, ஏதோ என்று பதறியபடி ஓடுவேன். ஒரு புத்தம் புதிய புத்தகத்தை என் முன்னால் நீட்டுவார். ‘இதோ சுடச்சுட வந்துவிட்டது. நம் துயரமெல்லாம் தீர்ந்தது ஜென்னி. நிச்சயம் இதற்கு நல்ல சன்மானம் தருவார்கள். குழந்தைக்கும் உனக்கும் நல்லதாக ஏதாவது வாங்கலாம். எங்காவது கவலையின்றி ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். என்ன சொல்கிறாய்?’
What's Your Reaction?