கழுகு வேட்டை முருகன் | கதை
அடர்ந்த காட்டில் வழிதவறி வந்துவிட்ட முயல் குட்டி ஒன்று, பயத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காகப் புதரைவிட்டு வெளியே வந்த முயல், சுற்றும் முற்றும் பார்த்தது. அப்போது அதன் தலைமீது பொத்தென்று ஏதோ ஒன்று விழுந்தது.

அடர்ந்த காட்டில் வழிதவறி வந்துவிட்ட முயல் குட்டி ஒன்று, பயத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காகப் புதரைவிட்டு வெளியே வந்த முயல், சுற்றும் முற்றும் பார்த்தது. அப்போது அதன் தலைமீது பொத்தென்று ஏதோ ஒன்று விழுந்தது. பயத்தில் மீண்டும் புதருக்குள் நுழைந்துவிட்டது.
சிறிது நேரம் கழித்துப் புதரிலிருந்து வெளிவந்த முயல், ‘ஐயோ... இந்த அடிபட்ட கிளிதான் என் மேல் விழுந்ததா? இதை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே’ என்று நினைத்தது. உடனே தன் நண்பன் குரங்கைத் தேடிச் சென்றது முயல். “என்னப்பா, எதுக்கு இப்படி ஓடி வர்றே? ஏதாவது ஆபத்தா?” “அதெல்லாம் இல்ல. ஒரு கிளி அடிபட்டு, மயக்கமா இருக்கு. அதை எப்படியாவது காப்பாத்தணும். உன்னால் முடியுமா?” என்று கேட்டது முயல்.
What's Your Reaction?