முரகாமியின் பூனை | தேன் மிட்டாய் 40

என் எழுத்துகளுக்குள் எப்படி நீ தாவி அமர்ந்துகொள்கிறாய்? நான் ஏற விரும்பிய ரயில் மறைந்து, மேலும் 3 வண்டிகள் சென்ற பிறகும் பால்நிறப் பூனையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தேன். நீ ஒரு பெரும் புதிர்.

Feb 19, 2025 - 12:50
 0  4
முரகாமியின் பூனை | தேன் மிட்டாய் 40

ஒரு பூனை எப்போது, எங்கே தோன்றும் என்று யாராலும் சொல்ல முடியாது. ரயில் பிடிப்பதற்காக விரைந்து சென்றுகொண்டிருப்பேன். இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றன... இன்னும் 1 நிமிடம்தான் இருக்கிறது... இதைப் பிடித்தால்தான் சரியான நேரத்துக்குச் சரியான இடத்துக்குப் போய்ச் சேரமுடியும். அங்கே காத்துக்கொண்டிருக்கும் நண்பரைக் காணவும் முடியும். கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருப்பேன்.

தொப்பென்று வானத்திலிருந்து குதித்ததுபோல் ஒரு வெள்ளைப் பூனை என் முன்னால் வந்து நிற்கும். வட்டக் கண்களைக் கொண்டு என்னை உற்று உற்றுப் பார்க்கும். மணிக்கட்டைப் பார்ப்பேன். இன்னும் 20 விநாடிகள் இருக்கின்றன. அதோ, ரயில் மேடை. தாவி ஓடினால் பிடித்துவிட முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow