‘ஹாக் ஹாக் ஹாக்’ என்றால் என்ன? | உயிரினங்களின் மொழி - 12
இந்திய ’மெக்காக்’ குரங்குகளைச் சந்தித்தால், முதலில் தங்கள் புருவங்களை வேகமாக உயர்த்தும். இது ’ஹலோ, நான் உனக்குத் தீங்கிழைக்க வரவில்லை’ என்பதன் சைகை மொழி. ஆராய்ச்சியாளர் ரோனால்ட் தனது ஆய்வில், மெக்காக் குரங்குகள் சில நொடிகளுக்கு மற்றொரு குரங்கின் கண்களைப் பார்த்து, பின்னர் புருவங்களை மேலே தூக்கும்போது, அது ஒரு நட்பு சைகையாகக் கருதப்படுகிறது என்று கண்டறிந்தார். இதையே நீண்ட நேரம் செய்தால், அது வாய் தகராறுக்கோ கைகலப்புக்கோ தயாராகிறது என்று அர்த்தம்.

குரங்குகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பல உத்திகளைக் கையாள்கின்றன. ’ஹாக் ஹாக் ஹாக்’ என்கிற கூர்மையான ஒலி வருகிறது என்றால், அது வெர்வெட் குரங்கு எழுப்பும் எச்சரிக்கை ஒலி. அதைக் கேட்ட மற்ற வெர்வெட் குரங்குகள் மரத்தின் உச்சியை நோக்கிப் பாய்ந்து செல்லும். இதெல்லாம் ஒரே நொடியில் நடந்துவிடும். இதற்குக் காரணம் அந்தப் பக்கமாக நோட்டம் விட்டுச் சென்ற சிறுத்தையாகக்கூட இருக்கலாம்.
அதே கழுகுகளைக் கண்டால், ’பீப் பீப்’ என்கிற உயர் அதிர்வெண் ஒலியை எழுப்புகின்றன. இதைக் கேட்டதும் குரங்குகள் அருகிலுள்ள புதர்களில் ஒளிந்துகொள்கின்றன. பாம்பு தென்பட்டால், ’சுர்ர்ர்... சுர்ர்ர்...’ என்கிற தொடர்ச்சியான, மென்மையான ஒலியை எழுப்புகின்றன. இந்த ஒலியைக் கேட்ட மற்ற குரங்குகள் நிமிர்ந்து நின்று, கவனமாகத் தரையைப் பார்க்கத் தொடங்குகின்றன.
What's Your Reaction?