பாடும் கிளிகள் | உயிரினங்களின் மொழி - 11

ஒரு சராசரி கிளியால் இருபது முதல் நாற்பது வெவ்வேறு வகையான ஒலிகளை உருவாக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உண்டு. உதாரணத்திற்கு, ’கீ..கீ..’ என்று சத்தமிட்டால், குழுவில் உள்ள மற்ற கிளிகளை அழைக்கிறது. அல்லது தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கிறது. அதுவே திடீரென்று உரத்த ஒலிகளை எழுப்பினால் ஆபத்து இருக்கிறது.  மென்மையான, இனிமையான ஒலிகள் எனில் துணையை ஈர்க்க.  அது போலவே குழுவிற்குள் உறவுகளை நிர்வகிக்க வேறு விதமான ஒலிகளைப்  பயன்படுத்துகின்றன.

Mar 28, 2025 - 18:05
 0  3
பாடும் கிளிகள் | உயிரினங்களின் மொழி - 11

மனிதர்கள் வளர்க்கும் வளர்ப்பு உயிரினங்களில் பேச்சுத் திறமைக்குப் பெயர் பெற்றவை கிளிகள். அவற்றுக்கு அறிவுக்கூர்மையும் அதிகம். நாம் கற்றுத்தரும் சொற்களை அப்படியே திரும்பவும் சொல்லும் திறன் கொண்டவை. அதே நேரத்தில் அவற்றுக்கு என்று தனித்துவமான ஒரு மொழியும் உண்டு.

ஒரு சராசரி கிளியால் இருபது முதல் நாற்பது வெவ்வேறு வகையான ஒலிகளை உருவாக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உண்டு. உதாரணத்திற்கு, ’கீ..கீ..’ என்று சத்தமிட்டால், குழுவில் உள்ள மற்ற கிளிகளை அழைக்கிறது. அல்லது தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கிறது. அதுவே திடீரென்று உரத்த ஒலிகளை எழுப்பினால் ஆபத்து இருக்கிறது. மென்மையான, இனிமையான ஒலிகள் எனில் துணையை ஈர்க்க. அது போலவே குழுவிற்குள் உறவுகளை நிர்வகிக்க வேறு விதமான ஒலிகளைப் பயன்படுத்துகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow