நான் யார்? | கதை

“நீ ம்ம்மானு கத்தினே, அப்ப நீ ஒரு மாடு” என்றது டூடூ. “நான் மாடா? அதான் என் பேரா?” “இல்ல, மாடு என்பது இனம். வா, உன்னை மாடுகள் கிட்ட கூட்டிட்டுப் போறேன்.”

May 21, 2025 - 13:25
 0  3
நான் யார்? | கதை

அந்தக் குட்டி பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்தது. கண் விழித்ததும் தன் தாயைத் தேடியது. ஆனால், யாருமே இல்லை. மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தது. ‘ஐயோ... நான் யார் என்றும் தெரியவில்லை. என் அம்மா எங்கே என்றும் தெரியவில்லை’ என்று நினைத்தபோதே, அந்தக் குட்டிக்கு அழுகை வந்துவிட்டது.

அந்தப் பக்கமாகப் பறந்து கொண்டிருந்த உண்ணிக் கொக்கு, “ஏன் அழற?” என்று கேட்டுக்கொண்டே, குட்டியின் முதுகில் அமர்ந்தது. “நீ யார்?” “உண்ணிக் கொக்கு என்பது என் இனம். என் பெயர் டூடூ.” “இனம்னா என்ன?” “ஒரே மாதிரி நிறைய பேர் இருந்தா அவங்க எல்லாம் ஒரே இனம். நீ ஏன் அழற?” “நான் யார்?” “என்ன, நீ யார் என்று தெரியலையா?” “ஆமா, என் அம்மாவைக் காணோம். நான் யாருன்னு தெரியுமா?”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow