சினிமாக்களில் ‘மறதி’ - அல்சைமர் நோய் என்றால் என்ன?
ஆரம்ப நிலை அல்சைமர் நோயைக் கண்டறிவதற்கு அறிவாற்றல் மதிப்பீடுகள், நரம்பியல் பரிசோதனைகள், மேம்பட்ட இமேஜிங் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அடுக்குப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

வி.கிருஷ்ண மூர்த்தி எழுதி, சுதீஷ் சங்கர் இயக்கிய 'மாரீசன்' திரைப்படத்தில், வடிவேலு தனது நடிப்புத் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக வடிவேலு, அவரின் நகைச்சுவை வெளிப்பாடுகள், முகபாவனைகள் மூலம் நம்மைச் சிரிக்க வைத்துப் பார்த்திருக்கிறோம். இதில், அவர் ஒரு அல்சைமர் நோயாளி.
அறிமுகக் காட்சியில் அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தனது மகன் என்று நினைக்கும் ஒருவரை அழைக்கிறார். அந்த அந்நியன் ‘தயாளன்’ (ஃபஹத் ஃபாசில்), ஒரு திருடன். அவன் திருட உள்ளே நுழைந்திருக்கிறான். அவன் விரைவாகத் திருடிச் செல்ல நினைக்கும்போது சங்கிலியால் கட்டப்பட்ட மனிதனைப் பார்க்கிறான். அம்மனிதனிடம் அதிகமான பணம் இருக்கிறது. ஞாபக சக்தி இல்லாத அந்த மனிதனுடன் அவன் நேரம் செலவிட்டால் போதும் திருடிவிடலாம். இருவரும் ஒரு சாலைப் பயணம் செல்ல முடிவு செய்கிறார்கள். அப்போது நடைபெறும் விஷயங்கள் படத்தை வியத்தகு முறையில் மாற்றுகின்றன.
What's Your Reaction?