MobLand Web Series: தேம்ஸ் நதிக்கரையில் ஒரு ‘தக் லைஃப்’

அரசுகளும் போர்களும் நிரந்தரமானவை. அது பேரரசோ அல்லது  சிறு குழுவோ, இரண்டுக்குமே சதுரங்க விதிகள் பொதுவானவை. லண்டன் மாநகரத்தில் ஒழுங்கமைக்கப் பட்ட குற்றப் பின்னணியில் இரு குறுநில மன்னர்கள்.

Jun 8, 2025 - 10:15
 0  2
MobLand Web Series: தேம்ஸ் நதிக்கரையில் ஒரு ‘தக் லைஃப்’

அரசுகளும் போர்களும் நிரந்தரமானவை. அது பேரரசோ அல்லது சிறு குழுவோ, இரண்டுக்குமே சதுரங்க விதிகள் பொதுவானவை. லண்டன் மாநகரத்தில் ஒழுங்கமைக்கப் பட்ட குற்றப் பின்னணியில் இரு குறுநில மன்னர்கள். அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுக்கு விசுவாசமானவர்களும் ஒருபுறம் என்றால், அவர்களை மடக்கக் காத்திருக்கும் புலனாய்வுத் துறை இன்னொரு புறம். இந்த மூன்று குழுக்களிடையே நிகழும் விநோதமான சதுரங்க வேட்டைதான் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும் ‘மாப்லேன்ட்’ இணையத் தொடரின் கதைக்களம்.

ரோனான் பென்னட்டின் எழுத்து, இயக்கத்தில், நம் காலத்து அசல் நடிகரான டாம் ஹார்டியின் அபாரமான நடிப்பில் இத்தொடர் மிளிர்கிறது. முதல் சீசனில் இருக்கும் பத்து அத்தியாயங்களும் நம்மை இருக்கையின் நுனியில் அமரவைத்து, அடுத்தது என்ன என்கிற பேரார்வத்தை உருவாக்கிவிடுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow