பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - சிறப்பு தொழுகை நடத்தி குர்பானி வழங்கல்

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் குர்பானி வழங்கி மகிழ்ந்தனர்

Jun 8, 2025 - 10:10
 0  4
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - சிறப்பு தொழுகை நடத்தி குர்பானி வழங்கல்

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் குர்பானி வழங்கி மகிழ்ந்தனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாகத்தைப் போற்றும் வகையில் இஸ்லாமிய மாதமான துல்ஹிஜ்ஜா 10ம் தேதி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தனது மகனை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow