மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

குமுளி: மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ல் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி, மங்கல இசை முழங்க நடையைத் திறந்து வைத்தார். பின்னர், 18-ம் படி வழியே கீழிறங்கி ஆழிக்குண்டத்தில் தீபம் ஏற்றினார்.
அருண்குமார் நம்பூதிரியின் பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததால், சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோரை பொறுப்பேற்கச் செய்யும் வகையில் அவர்களின் கையைப் பிடித்து 18-ம்படி வழியே சந்நிதானத்துக்கு அழைத்து வந்தார். அங்கு இருவருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?