எலத்தூர் குளத்திற்கு வருகை தரும் கூம்பலகன் பறவைகள்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளம் தமிழ்நாட்டின் அதிக பல்லுயிர்கள் வாழும் சூழலியல் முக்கியம் பெற்ற இடங்களில் ஒன்றாகும்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளம் தமிழ்நாட்டின் அதிக பல்லுயிர்கள் வாழும் சூழலியல் முக்கியம் பெற்ற இடங்களில் ஒன்றாகும். மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் நெடுந்தூரம் பயணித்து அரிதாக வலசை வரும் செந்தலைக் கூம்பலகன் (Red headed bunting) மற்றும் கருந்தலைக் கூம்பலகன் (Black headed bunting) பறவைகள் எலத்தூர் குளத்திற்கு வருகை தந்துள்ளன. இப்பறவைகளின் வருகை முதன்முறையாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
கூம்பைப் போன்ற அலகை கொண்டதால் இப்பறவைகள் தமிழில் கூம்பலகன் என அழைக்கப்படுகின்றன. உருவில் சிட்டுக்குருவி போன்று காணப்படும் இவற்றில் உலகளவில் 44 இனங்கள் உள்ளன. இவை பாடும் பறவைகள் வகையை சார்ந்தவை (Oscines). திறந்தவெளி புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், புதர்வெளிகள், காடுகளின் இணையும் பகுதிகளில் (ecotones) இவை பரவலாகக் காணப்படுகிறது. விதைகள், தானியங்கள் உண்டு வாழும் இப்பறவைகள், இனப்பெருக்க காலங்களில் புரதத் தேவைக்காக புழு பூச்சிகளையும் உணவாக கொள்கின்றன.
What's Your Reaction?