மியான்மர் பூகம்பம்: தாய்லாந்தில் சரிந்த கட்டிடங்கள் - பாதிப்புகள் எத்தகையது?

மியான்மரில் வெள்ளிக்கிழமை இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் தாக்கம், மியான்மருக்கு அருகில் உள்ள தாய்லாந்திலும் வெகுவாக உணரப்பட்டது. பாங்காகில் சில உயர்ந்த கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Mar 28, 2025 - 18:00
 0  3
மியான்மர் பூகம்பம்: தாய்லாந்தில் சரிந்த கட்டிடங்கள் - பாதிப்புகள் எத்தகையது?

நைப்பியிதோ: மியான்மரில் வெள்ளிக்கிழமை இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தின் தாக்கம், மியான்மருக்கு அருகில் உள்ள தாய்லாந்திலும் வெகுவாக உணரப்பட்டது. பாங்காகில் சில உயர்ந்த கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து ஆறு பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிலைமையை விரைவாக ஆராய்ந்து, மீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பினை நேரில் பார்த்த இருவர் அளித்த பேட்டியில், “நிலநடுக்கம் ஏற்பட்டபோது நாங்கள் மசூதியில் தொழுது கொண்டிருந்தோம். நிலநடுக்கத்தால் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்" என்று தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow