யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று (மார்ச 28-ம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

Mar 28, 2025 - 16:50
 0  3
யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி இன்று (மார்ச 28-ம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சின்னக் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது கோமளவல்லி தாயார் சமேத சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். இந்தக் கோயில் யதோக்தகாரி பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி அதிகாலையில் கடந்த 23-ம் தேதி கோயில் கொடிக்கம்பத்தில் பட்டாச்சாரியார்களால் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow