சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

Jan 27, 2025 - 19:15
 0  4
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

நாகர்கோவில்: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் 11 நாள் தைத்திருவிழா கடந்த 17-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிறைவு நாளான இன்று மதியம் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow