ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா ஏப்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் ரங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.

Apr 13, 2025 - 01:00
 0  5

தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம்(கோரதம்) நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் காலை 8 மணிக்கு தாயார் சந்நிதியில் இருந்து கோ ரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்துக்கு புறப்பட்டார். அங்கு காலை 8.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர், காலை 9.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்த தேர், மதியம் 12.30 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர், தேரின் முன்பு பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow