கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழாவில் இன்று (அக்.26) காலை தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழாவில் இன்று (அக்.26) காலை தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் 9-வது நாளான இன்று (அக்.26) காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
What's Your Reaction?