குமரி பரிவேட்டை ஊர்வலத்தில் பொம்மை யானையுடன் ஊர்வலம் வந்த பக்தர்கள்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பரிவேட்டை ஊர்வலத்துக்கு யானை வழங்குவதாக உறுதியளித்து விட்டு ஏமாற்றியதால் அதிருப்தியடைந்த பக்தர்கள் பொம்மை யானையுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். பெண்கள் யானை வழங்காத அரசை கண்டிப்பதாக பதாகைகள் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

Nov 11, 2024 - 15:43
 0  5
குமரி பரிவேட்டை ஊர்வலத்தில் பொம்மை யானையுடன் ஊர்வலம் வந்த பக்தர்கள்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பரிவேட்டை ஊர்வலத்துக்கு யானை வழங்குவதாக உறுதியளித்து விட்டு ஏமாற்றியதால் அதிருப்தியடைந்த பக்தர்கள் பொம்மை யானையுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். பெண்கள் யானை வழங்காத அரசை கண்டிப்பதாக பதாகைகள் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த விழாவில் விஜயதசமியன்றி நடைபெறும் இறுதி நாள் திருவிழாவில் பகவதியம்மன் மகாதானபுரத்திற்கு வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்வில் யானை முன்செல்ல ஊர்வலமாக ஏராளமான பக்தர்கள் செல்வதும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் மன்னர் காலத்தில் இருந்தே பாரம்பரியமாக நடந்து வந்த நிகழ்வு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow