சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கான வழிகாட்டுதல்களும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

Jan 27, 2025 - 20:00
 0  6
சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை: சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கான வழிகாட்டுதல்களும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow