தங்கம் விலை தொடர் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.66,280-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கு விற்பனை. 

Apr 7, 2025 - 11:30
 0  5
தங்கம் விலை தொடர் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.66,280-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கு விற்பனை.

தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 என தங்கம் விலை குறைந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 வரை சரிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow