சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது. 

Sep 4, 2025 - 12:20
 0  3
சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 137 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,37,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow