கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் 8,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு ஏற்பாடு
கச்சத்தீவில் மார்ச் 14, 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 4,000 இலங்கை பக்தர்களும், 4,000 இந்திய பக்தர்கள் என மொத்தம் 8,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ராமேசுவரம்: கச்சத்தீவில் மார்ச் 14, 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 4,000 இலங்கை பக்தர்களும், 4,000 இந்திய பக்தர்கள் என மொத்தம் 8,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
ஒவ்வொர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய - இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
What's Your Reaction?