அண்ணாமலையார் கோயிலை போன்று ஆந்திராவின் அன்னாவரத்திலும் பவுர்ணமி கிரிவலம்: 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலையை போன்று ஆந்திராவின் அன்னாவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணர் வைணவ கோயிலிலும் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்னாவரம்: திருவண்ணாமலையை போன்று ஆந்திராவின் அன்னாவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணர் வைணவ கோயிலிலும் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
அக்னி திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாகிறது.
What's Your Reaction?